மட்டன் பிரியரா நீங்கள்? மட்டன் நெய் வறுவல் இப்படி செய்து பாருங்க
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மட்டன் நெய் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மட்டன்
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மட்டன் பெரும்பாலான நபர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மட்டனை குழம்பு மற்றும் கிரேவி, சுக்கா என வைத்து சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்று கிழமையில் வறுத்து அரைத்த மசாலாவுடன் வீட்டில் மட்டன் நெய் ரோஸ்ட் செய்யவது குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மட்டன் மரினேட் செய்ய தேவையானவை
மட்டன் - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மசாலா அரைக்க தேவையானவை
கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ் ஸ்பூன்
பூண்டு பல் - 6
சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கிராம்பு - 2

மற்ற பொருட்கள்
புளி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நுணுக்கிய வெல்லம் - 2 டிஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
அகலமான பாத்திரத்தில் மட்டனைப் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீருடன் சிக்கனை சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், வெந்தயம், மிளகு, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து 4 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுத்து மிக்ஸியில் சேர்க்கவும்.

பின்பு அதனுடன் பூண்டு, புளி விழுது மற்றும் சிறிதளவு தண்ணீரு் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து கறிவேப்பிலை சேர்க்கவும். இதனுடன் வறுத்து அரைத்த மசாலாவை போட்டு நெய் பிரிந்துவரும் வரை சமைக்கவும்.
பின்பு மட்டனை சேர்த்து மூடிபோட்டு சுமார் 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்தால் சுவையான மட்டன் நெய் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |