டாய்லெட்டில் மஞ்சள் கறையை சுலபமாக அகற்ற வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்
மஞ்சள் கறை படிந்த டாய்லெட்டை மிகவும் சுலபமாக எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் கிருமிகள், பாக்டீரியாக்கள் அதிகமாக வாழும் இடம் என்றால் அது கழிவறையாக தான் இருக்கின்றது.
கழிவறையை சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான வேலையாக இருக்கின்றது. கழிவறையில் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதால் மஞ்சள் கறை படிந்து அசிங்கமாக காணப்படுகின்றது.
எனவே இவற்றை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் அதிக சிரமத்தை சந்திக்காமல், கழிவறையினை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
image: The Spruce / Taylor Nebrija
தேவையான பொருட்கள்:
சமையல் சோடா
எலுமிச்சை சாறு
டிஷ் வாஷ்
அத்தியாவசிய எண்ணெய்
கிளீனர் தயாரிக்கும் முறை
பாத்திரம் ஒன்றில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.
பின்பு டிஷ் வாஷ் மற்றும் 5 துளிகள் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். தற்போது கறைகளை எளிதில் அகற்றும் கிளீனர் தயார்.
இதனை முதலில் டாய்லெட்டினை சுற்றியும், அனைத்து இடங்களிலும் ஊற்ற வேண்டும். இதனை சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும் வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பின்பு பாத்ரூம் கழுவும் பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பின்பு கடைசியாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால், கறைகள் இல்லாத பளபளப்பான டாய்லெட்டினை நீங்கள் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |