Mushroom Pepper Masala: ஹோட்டல் சுவையில் காளான் மிளகு மசாலா செய்வது எப்படி?
ஆரோக்கியத்தை அளிக்கும் காளானில் மிளகு மசாலா எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிக சத்துக்கள் கொண்ட காளான் சைவ பிரியர்கள் மட்டுமின்றி அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாக இருக்கின்றது.
காளானை பல விதமாக சமைத்து சாப்பிடலாம். அதாவது அசைவ சுவையைக் கொடுக்கும் இதனை விரும்பி பலரும் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் காளானில் மிளகு மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
காளான் - 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
தண்ணீர் - 1/2 டம்ளர்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்து பொருட்களை போட்டு நன்கு வறுத்து அரைத்த பொடி செய்து கொள்ளவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிவிட்டு, மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
தொடர்ந்து பெரிய துண்டுகளாக்கி கழுவி வைத்துள்ள காளானை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |