தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர்! அற்புதங்கள் நிச்சயம்
தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது.
கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நல்ல நிவாரணம் அளிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது.
இதில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. கறிவேப்பிலையை பொடி அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.
தினமும் காலை கறிவேப்பிலை நீரை குடிப்பதால் என்னென்ன நன்மையினை பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை நீரின் நன்மைகள்
கறிவேப்பிலை நீரை தினமும் குடித்து வந்தால் வயிறு ஆரோக்கியமாக இருப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். செரிமான அமைப்பை ஆரோக்கிய வைக்கவும், அஜீரணம் போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கின்றது.
கறிவேப்பிலை நீரானது கொழுப்பை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக செயல்படுகிறது.
கறிவேப்பிலை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளதால், இவை நமது சருமத்தை பொலிவாகவும், ஈரப்பதமாகவும் வைக்கின்றது. மேலும் சருமத்தில் உள்ள கறைகளைக் குறைக்கவும் செய்கின்றது.
எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் கறிவேப்பிலை நீரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.
கறிவேப்பிலை நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். கறிவேப்பிலை நீரை குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு குறைகின்றது.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல பலனை அளிப்பதுடன், முடியையும் வலுவாக வைத்திருக்க உதவுகின்றது. கறிவேப்பிலை நீரை தினமும் குடித்து வந்தால் முடி பளபளப்பாகவும், கருமையாகவும், நீளமாகவும் வளருமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |