Moringa Powder: சத்தான முருங்கை கீரை பொடி... பல நோய்களுக்கு கிடைக்கும் தீர்வு
முருங்கை இலையில் பொடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கை கீரையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கட்டாயம் முருங்கை கீரை எடுத்துக் கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.
முருங்கையில் கீரை மட்டும் இல்லாமல் காய், பூ என அனைத்தும் மருத்து குணம் வாய்ந்ததாகும். இந்நிலையில் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாத முருங்கை கீரை பொடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
GETTY IMAGES
தேவையான பொருட்கள்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
முருங்கை கீரை - 3 கைப்பிடி
எண்ணெய் - 1 ஸ்பூன்
மிளகாய்வத்தல் - 10
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பூடு - 4 பல்
வெள்ளை எள் - 1 ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
காயப்பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் முருங்கை கீரையை பறித்து நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த முருங்கை கீரையை ஒரு கடாயில் போட்டு சற்று வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு இவற்றினை சேர்த்து வறுத்து கீரையுடன் வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூடு, வெள்ளை எள், தனியா, புளி, கறிவேப்பிலை இவற்றினை ஒன்றன் பின்பு ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் கீரை, உளுந்து, கடலைபருப்பு, துவரம் பருப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றினை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். கடைசியாக தேவையான அளவு உப்பு, சிறிது காய தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பாட்டில் ஒன்றில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சூடான சாதத்தில் குறித்த பொடி மற்றும் சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமான முருங்கை கீரை பொடி சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |