1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
பாசிப்பருப்பு கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.
பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களது ஏதாவது திண்பண்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் மாலை நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டி இருக்க வேண்டும்.
இங்கு அரை கப் பாசிபருப்பு கொண்டு பிரமாதமான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
Image: Steffi's
செய்முறை
முதலில் பாசிபருப்பை இரண்டு முறை தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1/4 கப் நெய் ஊற்றவும்.
நெய் சூடானதும், முந்திரி பருப்புக்களை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து அவற்றை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் வறுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பாசிபருப்பை சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும்.
தொடர்ந்து இதில் 1 கப் சர்க்கரையை சேர்த்து கிளறவும். பின்பு மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
சிறிதளவு கேசரி பவுடரை எடுத்து நீரில் கரைத்து ஊற்றி நன்கு கிளறிவிடவும். வாசனைக்காக ஏலக்காய் பொடியை சிறிதளவும், முந்திரியையும் சேர்த்து கிளறி இறக்கினால் பாசிபருப்பு அல்வா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |