பொடுகு தொல்லையால தலை அரிக்குதா? அப்போ புதினா இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க!
DHUSHI
Report this article
பொதுவாக தலை மிகவும் வரண்டு காணப்படும் போது பொடுகு பிரச்சினை அதிகமாக இருக்கும்.
இதனால் வெளியில் செல்ல முடியாது, நினைத்த மாதிரி முடியை வார முடியாது, என பல பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன் அதிகமாக வியர்வை இருக்கும் பொழுது, தலை அரிக்க ஆரம்பிக்கும்.
இந்த பிரச்சினை காலப்போக்கில் சொரியாசிஸ் போன்ற கொடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பொடுகு பிரச்சினையை இல்லாமலாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
புதினா எண்ணெய்
தேவையான பொருட்கள்
- புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய், - தேவையானளவு
- போத்தல் - 1
செய்முறை
முதலில் தேவையானளவு புதினா இலைகளை எடுத்து ஒரு போத்தலில் ஏதாவது எண்ணெயுடன் போட்டு ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் புதினா இலைகளை தனியாக பிழிந்து எடுத்து விட்டு காற்று உட்புகாதவாறு ஒரு போத்தலில் போட்டு குளிர்மையான ஒரு இடத்தில் வைக்கவும்.
இதனை வாரத்திற்கு இரண்டு தடவைகள் பயன்படுத்துவும். இது தலையை குளிர்ச்சிப்படுத்தி, தலைமுடியை நன்றாக வளர வைக்கும்.
முக்கிய குறிப்பு
ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையை நாடவும்....
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |