ருசியான மாங்கா ஊறுகாய் ...இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்
மாங்காயில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
- சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1 தேக்கரண்டி
- வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி
- உப்பு - சுவைகேற்ப

செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.
கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.

இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி.