சூடான தேநீருக்கான சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்..
பொதுவாக தமது வீடுகளில் பாக்கோடா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.
இதன்படி, மாலை நேர சூடான தேநீருக்கான, சுவையான கேழ்வரகு பக்கோடா எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
கேழ்வரகு பக்கோடாவிற்கு தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 100 கிராம்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் கேழ்வரகு பக்கோடாவிற்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை என்பவற்றை பொடியாக்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு பவுலில் கேழ்வரகு மா, அரிசி மாவு, தயிர் மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , இஞ்சி - கறிவேப்பிலை என்வற்றை ஒன்றாக சேர்த்து பினைய வேண்டும். அதில் தேவையானளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனை 5 நிமிடங்கள் சூடாக விட்டு, எண்ணெயில் பக்கோடா மாவை சிறிய துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொறித்தெடுக்க வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேழ்வரகு பக்கோடா தயார்..!