கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு அப்பம்! 10 நிமிடங்கள் செய்யலாம் வாங்க..
பொதுவாக மாலை நேரங்களில் என்ன சாப்பிடலாம் என யோசணையுடன் இருப்போம்.
இவ்வாறு யோசனை வரும் போது கால்சியம் அதிகம் உள்ள கேழ்வரகு அப்பம் செய்யலாம்.
இந்த அப்பம் சுகர் நோயாளர்களுக்கு சிறந்தது என்ன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அப்பம் என்றாலே உட்பட பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு சிற்றூண்டியாகும்.
இதனை பயன்படுத்தி பால் அப்பம், பாணி அப்பம், முட்டை அப்பம் என பல வகை அப்பங்கள் தயாரிக்கலாம்.
அந்த வகையில் மாலை நேரங்களை இனிமையாக்கும் கேழ்வரகு அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 1 கப்
சாதம் - 1/4 கப்
சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 3/4 கப்
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் கேழ்வரகு மாவை எடுத்து நன்றாக சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி, மிதமான தீயினால் சூடேற்றி அதனை ஆற வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மைப் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து தீயினால் வாட்டி வைத்திருக்கும் மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த கலவையைப் போட்டு அதனுடன் தேவையானளவு உப்புச் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். இக்கலவையை சுமார் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதனை இரவு வேளைகளில் கரைத்து வைத்தால் காலையில் தோசையை ஊற்றுவதற்கு இலகுவாக இருக்கும். 8 மணித்தியாலங்களுக்கு பின்னர் அப்பத்தை ஊற்றி சுமார 3 - 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேழ்வரகு அப்பம் தயார்.