சிக்கன் தொன்னை பிரியாணி... புதுசா ட்ரை பண்ணி பாருங்க
கர்நாடக ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பிரியாணி என்றால் அசைவ பிரியர்களுக்கு கொள்ளை பிரியமாக இருக்கும். தற்போது சிறு குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பகல் நேரம் மட்டுமின்றி நள்ளிரவிலும் அதிகளவில் பிரியாணி கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் சாப்பிடும் வழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
சிறிது ஸ்ரெஸ்ஸாக இருந்தாலும் உடனே சென்று பிரியாணியை சாப்பிட்டு மனதை பக்கிவ நிலைக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். இவ்வாறு பிரியாணி பிரியர்களுக்கு ஏற்ற வகையில், கர்நாடகா தொன்னை பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
சிக்கனை மேரினேட் செய்ய
1 கிலோ எலும்புடன் கூடிய சிக்கன் - 1/4 கப்
தயிர் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு
மசாலா அரைக்க:
1/4 கப் புதினா இலைகள்
1/4 கப் கொத்தமல்லி இலைகள்
2 கொத்து கறிவேப்பிலை
6 பச்சை மிளகாய்
1 இன்ச் இஞ்சி
2 பல் பூண்டு -
1 ஸ்பூன் கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை)
1/4 கப் தண்ணீர்
பிரியாணி செய்ய:
2 கப் சீரகச் சம்பா அரிசி
3 ஸ்பூன் நெய்
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 பிரியாணி இலை
2 மராட்டி மொக்கு
1/2 ஸ்பூன் சோம்பு
1 அன்னாசிப் பூ
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 துண்டு பட்டை
1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
1 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
1 ஸ்பூன் கறி மசாலா தூள்
1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
ஒன்றரை ஸ்பூன் மல்லித் தூள்
4 கப் சூடான தண்ணீர்
தேவையான அளவு உப்பு
1/2 எலுமிச்சை பழத்தின் சாறு

செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். மேலும் பிரியாணிக்கு தேவையான சிக்கனை எலும்புடன் வாங்கி நன்றாக கழுவி எடுக்கவும்.
சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து இதனை தனியாக வைக்கவும். மிக்ஸி ஜார் ஒன்றில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயத்தினை நன்றாக வதக்கிய பின்பு அதனுடன் அரைத்து வைத்து விழுதை சேர்த்து 4 நிமிடம் சமைக்கவும்.

பின்பு பிரியாணி மசாலா, கறி மசாலா தூள், மிளகு மற்றும் மல்லி தூள்களை சேர்த்து வதக்கவும். மசாலா தடவி வைத்த சிக்கனையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அடிபிடிக்காமல் தீயை குறைவாக வைத்து கிளறிவிட்டு, சிக்கன் சற்று வெந்ததும் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் அரிசி, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிட்டு, குக்கரை மூடி 2 வசில் போட்டு, அதன் பின்பு 20 நிமிடம் தம் போடவும்.
அவ்வளவு தான் இப்போது மூடியை திறந்தால் கமகமக்கும் கர்நாடகா தொன்னை பிரியாணி தயார். இதற்கு ரைத்தா மற்றும் வேக வைத்த முட்டையை வைத்து பரிமாறவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |