கல்யாண வீட்டு கார சட்னி! எப்படி செய்யனும்னு தெரியுமா?
கல்யாண வீட்டு ஸ்டைலில் கார சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
பூண்டு – 10 பல்
இஞ்சி – அரை இன்ச்
வர மிளகாய் – 10
புதினா – ஒரு கைப்பிடி
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – கால் கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
குண்டு மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு, அது சூடானதும் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, இஞ்சி, வரமிளகாய், புதினா, தக்காளி, உப்பு சேர்த்தும் நன்கு வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கியதை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து அது சிவந்தவுடன், அதில் கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாள் சேர்த்து பொரியவிட்டு சட்னியில் சேர்க்கவும், தொடர்ந்து கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கினால் கல்யாண வீட்டு கார சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |