ஹனி கார்லிக் சிக்கன்... மிகவும் சுலபமாக செய்வது எப்படி?
அசைவ பிரியர்களுக்கு பிடித்த மாதிரி ஹனி கார்லிக் சிக்கன் மிகவும் சுலபமாக எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
பெரும்பாலான அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளது சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் சமைப்பது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிக்கன் வகைகள் பிடிக்கும் நிலையில், சில வகைகள் சமைப்பதற்கு மிகவும் கஷ்டமாக தோன்றும்.
அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஹனி கார்லிக் சிக்கன் மிகவும் சுலபமாக எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
முட்டை - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
பூண்டு பவுடர் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பாத்திரத்தில் தனியாக எடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பவுடர், சோளமாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.
சிக்கனை பொறிக்க பேன் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்க்கவும். பின்பு பிரட்டி வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் எடுக்கவும்.

மற்றொரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி, அதில் சோயா சாஸ் மற்றும் தேன் சேர்த்து கிளறவும்.
பின்பு வேக வைத்துள்ள சிக்கனை எடுத்து அதில் சேர்த்து கிளறவும். கடைசியாக எள்ளு விதைகளை தூவி இறக்கினால் சுவையான ஹனி கார்லிக் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |