ஹனி கார்லிக் சிக்கன்... மிகவும் சுலபமாக செய்வது எப்படி?
அசைவ பிரியர்களுக்கு பிடித்த மாதிரி ஹனி கார்லிக் சிக்கன் மிகவும் சுலபமாக எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
பெரும்பாலான அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளது சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் சமைப்பது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிக்கன் வகைகள் பிடிக்கும் நிலையில், சில வகைகள் சமைப்பதற்கு மிகவும் கஷ்டமாக தோன்றும்.
அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஹனி கார்லிக் சிக்கன் மிகவும் சுலபமாக எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
முட்டை - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
பூண்டு பவுடர் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்

செய்முறை
முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பவுடர், சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து தேன் ஊற்றி நன்கு கிளறி, வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியாக எள்ளு விதைகளை தூவி கிளறி இறக்கினால், சுவையான ஹனி கார்லிக் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |