Sunday Special: அட்டகாசமான ஆட்டுக் குடல் குழம்பு.. இப்படி செய்து பாருங்க
இன்றைய ஸ்பெஷலாக ஆட்டுக்குடல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலான வீடுகளில் சமைப்பது வழக்கமாக இருக்கும். மட்டன், சிக்கன், மீன் வகைகள் என்று சமைத்தால் அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும்.
இந்நிலையல் இட்லி, சாதம் இவற்றிற்கு ஏற்ற வகையில் குடல் குழம்பு எ்வவாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 லிட்டர்
உப்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சுத்தம் செய்த ஆட்டு குடல் - 1 கிலோ
வறுத்து அரைப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 6
அன்னாசிப்பூ - 1
கல்பாசி - சிறிது
மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 1 கப்
குழம்பு தாளிப்பதற்கு..
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
குழம்பு மிளகாய் தூள் - 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது
தண்ணீர் - தேவையான அளவு
சுத்தம் செய்த குடல்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் ஆட்டுக்குடலை சுடுதண்ணீர் போட்டு நன்றாக சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்தும் குடலை சேர்த்து அடுப்பினை அணைத்துவிடவும்.
10 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டிவிட்டு, குடலை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி குளிர வைக்கவும்.

மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்த குடலையும் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் போட்டு வேகவிடவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |