சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? அடையாளம் தெரியாமல் காணப்படும் புகைப்படம்
சிறுத்தை படத்தில் நடிகர் காத்திக்கு மகளாக நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிறுத்தை
இயக்குனர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த மாபெரும் வெற்றி படம் தான் சிறுத்தை. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் தமன்னா, சந்தானம் நடித்துள்ள நிலையில், இப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்பு தான் இயக்குனர் சிவாவின் பெயர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகின்றது.

பேபி ரக்ஷனா
இந்த படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா என்பவர் நடித்திருந்தார். ஆராரோ ஆரிராரோ பாடலில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் பேபி ரக்ஷனாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நன்றாக வளர்ந்து ஆளே மாறியுள்ளார் நடிகை ரக்ஷனா.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |