அசத்தலான சுவையில் Green Chilli Chicken.. இப்படி செய்து பாருங்க
அசத்தலான சுவையில் Green Chilli Chicken Recipe எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்றாகும். சிக்கனை வித்தியாசமான முறையிலும், பல வகைகளிலும் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
அதில் ஒன்று தான் பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் கிரீன் சில்லி சிக்கன் ஆகும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் 3, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்திருக்கும் பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து நன்றாக பிசைந்துவிட்டு, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தொடர்ந்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிளகாயை வதக்கவும்.
பின்பு ஊற வைத்திருக்கும் சிக்கனை அதனுடன் சேர்த்து வதக்கி, மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்று கிளறவும்.
ஒரு 15 நிமிடம் வரை அடுப்பில் மூடி வைத்து நன்கு வேக விடவும், அவ்வப்போது கிளறி விட்டு கடைசியாக மல்லி இலையை தூவி இறக்கினால் க்ரீன் சில்லி சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |