குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முருங்கை அடை! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக பச்சையாக இருக்கும் கீரைகள் என்றாலே ஆரோக்கியம் நிறைந்தவையாக தான் இருக்கும்.
அந்தவகையில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கும் முருங்கை கீரையை வைத்து நிறைய வகையான உணவுகள் செய்யலாம். பெரியவர்கள் முருங்கை கீரையை சாப்பிடுவார்கள்.
ஆனால் குழந்தைகளுக்கு முருங்கை கீரை கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்.
இது போன்ற கஷ்டங்களை தீர்ப்பதற்கு முருங்கை கீரையை எடுத்து அடை செய்து கொடுக்கலாம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட முருங்கை அடையை எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி மாவு - 2 பவுல்
- இளம் முருங்கைக் கீரை - தேவையான அளவு
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் பச்சரிசி மாவை எடுத்து கொள்ளவும். அதில் முருங்கை கீரை, வெங்காயம் இரண்டையும் கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த விட்ட பின்னர் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்.
மாவை பிசைந்து முடித்த பின்னர் உருண்டை உருண்டையாக பிடித்து ஒரு தட்டி வைத்து கொள்ளவும்.
கடைசியாக தோசை கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு அடையாக போட்டு எடுக்க வேண்டும்.
அத்துடன் அடை சுட்டு எடுக்க நல்லெண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தலாம்.
வரமிளகாய் அல்லது அரைத்த சோம்பு பயன்படுத்தினால் வெவ்வேறு சுவை கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |