மொறு மொறுப்பான Potato Garlic Rings வீட்டில் செய்வது எப்படி?
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக நாம் மாலை நேரங்களில் மொறு மொறுவென இருக்கும் சிற்றுண்டி வகைகளை சாப்பிட விரும்புவோம்.
அந்த வகையில் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை - ½ கப்
- உருளைக்கிழங்கு - 2
- சோள மாவு - 2 மேசைக்கரண்டி
- பூண்டு பல் - 5 சில்லி ஃப்ளேக்ஸ்- 1 மேசைக்கரண்டி
- சாட் மசாலா - ¼ மேசைக்கரண்டி
- வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- பூண்டு, கொத்தமல்லியை போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்வதுடன் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி, நீர் சேர்க்காமல் மசித்து கொள்ள வேண்டும்.
- இதனையடுத்து மிக்ஸியில் ரவையை போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
- வெண்ணெய் உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு, பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்க வேண்டும்.
- பின்பு உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு 5 நிமிடம் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு, அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, சோள மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து சோள மாவுடன் கலந்த உருண்டைகளை டம்ளரை பயன்படுத்தி ரிங்க்ஸ் வடிவில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். சூடானதும் வடிவமைத்த ரிங்க்ஸ்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகு வரை பொறிக்க வேண்டும். தற்போது சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் Potato Garlic Rings தயார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US