ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத தேங்காய் பொடி! அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?
ஒரு மாதம் வரை வைத்திருந்தாலும், கெட்டுப்போகாமல் இருக்கும் தேங்காய் பொடி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் 1
புளி - சிறிய அளவு
இஞ்சி - 1 ஸ்பூன்
சீரகம் - 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 6 ஸ்பூன்
வத்தல் - 12
பூண்டு - 8 பல்
மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
வெல்லம் - அரை ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
பெருங்காயம் - கால் ஸ்பூன்
கருவேப்பிலை
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை
பாத்திரம் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில், சீரகம், இஞ்சி, உளுந்தம் பருப்பு , பூண்டு சேர்த்து கிளறவும்.
இதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கறிவேப்பிலை, வெல்லம், பெருங்காயம், புளி, மிளகாய் பொடி சேர்த்தும் கிளற வேண்டும்.
பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கி எடுத்து பின்பு ஆற வைக்கவும்.
பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் வதக்கிய பொருட்கள் அனைத்தும் போட்டு, அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு மாதம் வரை வைத்து சாப்பிட்டாலும் கெட்டுப் போகாத தேங்காய் பொடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |