சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி? வெறும் 10 நிமிடம் போதும்
சத்துக்கள் அதிகம் கொண்ட தேங்காய்பாலில் சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 1.5 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் மற்றும் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசிப் பூ - 1
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - அரை தக்காளி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
புதினா, மல்லி இலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, லவங்கம் போன்ற பொருட்களை கொண்டு தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி, புதினா, மல்லி சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதி வர ஆரம்பித்ததும், அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
மிதமான தீயில் 2 விசில் வைத்து இறக்கினால் அசத்தலான சுவையில் தேங்காய் பால் சாதம் தயார். இதனை உருளைக்கிழங்கு வறுவல், குருமா இவற்றினை வைத்து பரிமாறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |