வீட்டில் சிக்கன் இருந்தால் ஒருமுறை இப்படி உப்பு கறி செய்து பாருங்க!
வீட்டில் சிக்கன் இருந்தால் அதை வைத்து பல ரெசிபிகளை செய்வோம்.

அதுவே ஞாயிற்றுக் கிழமைகளில் மிகவும் ஷ்பெஷலாக செய்வோம்.
உங்களுக்கு வித்தியாசமாக எதாவது சிக்கனில் செய்ய வேண்டும் என்றால் சிக்கன் உப்பு கறியை செய்யலாம். சிக்கன் உப்பு கறி ஒரு அற்புதமான சைடு டிஷ் மற்றும் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
அதோடு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்யலாம் என்பதை பதிவை படித்து தெரிக.

தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்
- ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- கறிவேப்பிலை - சிறிது
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது

செய்யும் முறை
முதலில் சிக்கனை நன்கு நீரில் மஞ்சள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். நீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.