ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமான சிக்கன் முட்டை பொடிமாஸ்... வெறும் 10 நிமிடம் போதும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கன் முட்டை பொடிமாஸ் ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
முட்டை - 4
சின்ன வெங்காயம் - 150 கிராம் ( இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
எண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
தக்காளி - 1
இஞசி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்

சீரக தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் சிக்கனை தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் சிக்கனை அதனுள் சேர்த்து 4 நிமிடத்திற்கு நன்றாக வதக்கவும்.

பின்பு மூடிபோட்டு சிறிது நேரம் வேக விடவும். இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு மிளகாய், மல்லி, கரம் மசாலா, சீரக பொடியினையும், உப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு சிறிதளவு தண்ணீரை தெளித்துவிட்டு 4 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

சிக்கன் வெந்த பின்பு கடாயினை சுற்றி ஒதுக்கி வைத்துவிட்டு நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சிறிதளவு சேர்க்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின்பு முட்டையை பிரட்டிவிட்டு சிறிது வெந்தவுடன், நன்றாக கொத்திவிடவும். கடைசியாக மிளகு பொடி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |