வெங்காயத்தில் டீ போடலாமா? புதிய வீடியோவை வெளியிட்ட ஃபுட் பிளாக்கர்!
நீங்கள் ஒரு கப் காஃபியை சுவையாக குடிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், ஒரு உணவு பதிவரின் சோதனையானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெங்காய டீ
பிரபல ஃபுட் பிளாக்கர் காபியில் வெங்காயத்தை நனைத்து குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது டீ குடிக்காமல் பலருக்கும் பொழுதே விடியாது.
அதிலும் ஏராளமானோர் காஃபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து வேளைகளில் காஃபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் எப்போதும் போல காபியோ டீயோ அப்படியே குடிக்காமல் விதிதியாசமாகவும் சுவைத்துப்பார்பார்கள்.
அந்த வகையில் தான் சிங்கப்பூரைச் சேர்ந்த கால்வின் லீ, காஃபியில் சிறிது வெங்காயத்தைச் சேர்த்து பருகினார். அந்த வீடியோவில், லீ முதலில் சாதாரண காஃபி தயாரித்து அதில் வெங்காயத் துண்டுகளைச் சேர்க்கிறார்.
அதனை ஒன்றாக கலந்த பிறகு, அவர் கலவையை குடிக்கிறார். அதை குடித்தவுடன் அவர் கூறியதாவது, “காரமான வெங்காயச் சுவை காஃபியில்கூடுதல் கசப்பை உண்டாக்குகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை. மிகவும் சங்கடமான கப் காஃபி” என்று கூறியுள்ளார்.