இட்லி தோசைக்கு கத்திரிக்காய் சட்னி வைத்ததுண்டா? ஒருக்கா செய்து பாருங்க
இட்லி தோசைக்கு சுவையான வகையில் கத்திரிக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை, இரவு டிபன் செய்யும் போது பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை இவற்றினை தான் செய்வார்கள். இதற்கு பல வகைகளில் சட்னி வைத்து சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் இதுவரை அதிகமாக சாப்பிட்டிறாத கத்திரிக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பூண்டு - 8 பல்
பெரிய கத்திரிக்காய் - 3
தக்காளி - 2
புளி - 1 சிறிய துண்டு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி, அதனுடன் தக்காளி மற்றும் புளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
இதனை ஆற வைத்து பின்பு மிக்சி ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு கின்னத்தில் மாற்றிக்கொண்டு, பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து ஊற்றவும். தற்போது சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |