குழந்தைகளை பாகற்காய் சாப்பிடமாட்டிக்கிறாங்களா?இப்படி செஞ்சு கொடுங்க..
சுவையான பாகற்காய சிப்ஸ் கசப்பே இல்லாம வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
பாகற்காய்:
காய்கறி வகையில் குழந்தைகளுக்கு பிடிக்காத மற்றும் கசப்பு சுவை கொண்ட காய் பாகற்காய்.ஆனால் அதில் நிறைய சத்துக்கள் உள்ளன.
ஆனால் அது நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் நமக்கு சர்க்கரை நோயிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கம்.அது மட்டுமின்றி நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
இது மட்டுமின்றி நமக்கு எடை குறைப்பு, கண் ஆரோக்கியம், செரிமானம், மற்றும் நம் இரத்தததை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
அந்த வகையில் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை தெரயாமல் அதில் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாகற்காய்: 250 கிராம்
கடலை மாவு: 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு: 2 மேசைக்கரண்டி
சோள மாவு: 1 மேசைக்கரண்டி
மசாலாப் பொருட்கள்: மஞ்சள், மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு
மாங்காய்த்தூள் அல்லது எலுமிச்சை சாறு: 1 தேக்கரண்டி (கசப்பைக் குறைக்க)
எண்ணெய்: பொரிப்பதற்கு

செய்முறை:
முதலில் பாகற்காயை நன்கு கழுவி அதை வட்ட வடிவில் வெட்டி வைத்து, அதில் சிறிதளவு உப்பும் எலுமிச்சை சாறும் தடவ வேண்டும்.இதன் மூலம் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும்.
பின்பு அதை தண்ணீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு அதில் நாம் சேர்க்க வேண்டிய மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.
நாம் கழுவிய பாகற்காயை அதில் போட்டு நன்கு கலக்கவும்.பின்பு ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் நாம் கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
அது நன்கு பொரிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் டிஷ்யு பேப்பர் வைத்து அதில் உள்ள எண்ணெயை வடிகட்டி பின்பு அதை பகிரவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |