ரெஸ்டாரண்ட் சுவையில் கார்லிக் பட்டர் சிக்கன்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
ஹோட்டல் ஸ்டைலில் கார்லிக் பட்டர் சிக்கன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உணவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சைவம் மற்றொன்று அசைவம். ஆனால் நம்மில் பலர் அசைவ உணவுகளையே தான் அதிகமாக விரும்புவோம்.
வீட்டு விசேஷங்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் என அனைத்திற்கும் அசைவ உணவுகளையே விருந்தாக வைக்கின்றனர். அந்த வகையில் சிக்கன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
ஹோட்டல் ஸ்டைலில் கார்லிக் பட்டர் சிக்கன் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத கோழி – ½ கிலோ
வெண்ணெய் - 3-4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு சிக்கனில் மைதா மாவை தூவி அனைத்து துண்டுகளையும் ஊற வைக்கவும். இவை சிக்கன் துண்டுகள் மொறுமொறுப்பாக இருப்பதற்கு உதவுகின்றது.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பின்பு மசாலா தடவிய சிக்கனை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

மீதமுள்ள வெண்ணெய்யை அதே வாணலியில் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நல்ல மணம் வரும்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாஸ் பதத்திற்கு வரும்வரை சமைக்கவும்.
இதனுடன் பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக 2 -3 நிமிடம் கலந்துவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் கார்லிக் பட்டர் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |