சளி, இருமல், ஜலதோஷமா? இருக்கவே இருக்கு வெற்றிலை சட்னி- யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக பனிக்காலம் வந்து விட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வந்து விடும்.
பருவ கால நோய் தொற்றை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம்.
அந்த வகையில், வீடுகளில் பெரியவர்கள் சாப்பிடும் வெற்றிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்து ஊட்டசத்துக்கள் இருக்கின்றன.
இதனால் வெற்றிலையை அல்சர், அஜீரணம், ரத்த சர்க்கரை ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.
இது போன்ற வியாதியுள்ளவர்களுக்கு வெற்றிலையில் எப்படி சட்னி செய்து கொடுப்பது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
வெற்றிலை - 3
மிளகாய் - 2
உப்பு - தேவையானளவு
பூண்டு - 2
கடுகு, உளுந்து - தாளிக்கேற்ப அளவு
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் மிளகு மற்றும் சீரகத்தை போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
அதன் பின்னர் அதனுடன் தேங்காய், பொட்டுக்கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு போட்டு நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
இதன் போது அடுப்பை மிதமான வெப்ப நிலையில் வைக்க வேண்டும். கலந்த கலவையை ஒரு மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அந்த கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சற்று சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும்.
சேர்த்து இறக்கினால் சுவையான வெற்றிலை சட்னி தயார்!
முக்கிய குறிப்பு
சளி பிரச்சினையுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பாட்டிகலந்து ஊட்டினால் சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |