மறக்காமல் தினமும் 2 வெற்றிலை கட்டாயம் சாப்பிடுங்க! அதிசயத்தை காண்பீங்க
திருமணம் போன்ற சுபகாரியங்கள், பூஜை அறைகள் என அனைத்து விசேஷங்களுக்கும் வெற்றிலை என்பது முக்கியமான பொருளாக இருக்கின்றது. இதில் பலவகையான சத்துக்களும் இருக்கின்றது.
வெற்றிலை
சிறந்த நச்சு நீக்கியாக இருக்கும் வெற்றிலையை நாம் எடுத்துக்கொண்டால், உடலில் சேரும் அழுக்குகள் நீங்குவதுடன், யூரிக் அமிலத்தின் அளவும் சீராக வைப்பதற்கு உதவுகின்றது.
வெற்றிலை வயிற்றில் உள்ள பியூரின் அளவை அதிகரிக்காமல் செய்வதுடன், யூரிக் அமிலம் சீராக வைப்பதால், மாரடைப்பு, சிறுநீரக பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியும்.
வாய் துர்நாற்றத்தினை முற்றிலும் போக்கும் வெற்றிலையை முன்னோர் சளி, காய்ச்சல், நெஞ்சு இறுக்கம், சுவாசக்கோளாறு ஆகியவை குணமாக்க அதிகமாக பயன்படுத்தினர்.
வெற்றிலையை, கிராம்பு நீரில் கொதிக்க வைத்து டீ போல் குடித்து வர சுவாசக் கோளாறுகள் சரியாவதுடன், வெற்றிலையின் பத்து போட்டால் தலைவலியும் குணமாகும்.
வெற்றிலை உண்பதால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகின்றன. நம் உடலில் காணப்படும் பல நச்சுப்பொருள்களை வெற்றிலை சுத்தம் செய்கிறது.