சுகரை சட்டுன்னு குறைக்கணுமா? குதிரை வாலி அரிசியில் இந்த salad செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் இருக்கும்.
அந்த வகையில் சிறுதானியத்தில் மிக அதிகமான நார்சத்துள்ள அரிசியாக குதிரை வாலி அரிசி பார்க்கப்படுகின்றது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனை கொண்டு மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த சுவையாக சாலட்டை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
குதிரை வாலி அரிசி
தக்காளி
வெள்ளரிப் பிஞ்சு
எலுமிச்சம் பழச் சாறு
மிளகு
சீரகம்
பூண்டு
வெங்காயம்
குடமிளகாய்
சாலட் எண்ணெய்
செய்முறை
முதலில்10 பல் பூண்டை எடுத்து சுத்தம் செய்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி, குட மிளகாய், வெள்ளரி, வெங்காயம் ஆகிய இவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குதிரை வாலி அரிசியை நன்றாக ஊறவைத்து, பின் நன்றாக வேக வைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அவை அனைத்தையம் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு கலந்து எலுமிச்சம் பழச் சாறு, மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு, எண்ணெய் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.
இறுதியில் வேக வைத்த குதிரை வாலி அரிசியை இதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து சில மணி நேரங்கள் நன்கு குளிரவிட்டால் சுவையான குதிரை வாலி அரிசி சாலட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |