குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான பேபி கார்ன் பிரை- செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பேபி கார்ன் பிரையை எப்படி அருமையாக செய்வது என்பதை பற்றி பார்ப்போம்....
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் - 5 கூம்புகள்
சோள மாவு - அரை கப்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை
முதலில் பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்ததாக அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அதன் பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ருசியான பேபி கார்ன் பிரை ரெடி.