நாவூரும் சுவையில் புளி மிளகாய் சட்னி... இதை செய்தால் உங்களுக்கு மிஞ்சம் இருக்காது
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.அதிலும் காரசாரமாக சட்னி வகைகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது மதுரை தான்.
காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் விரைவாக காலை உணவை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்திற்கு சரியாக தெரிவு புளி மிளகாய் சட்னி தான்.
வெறும் பத்தே நிமிடத்தில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் புளி மிளகாய் சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 5-6
புளி - 1 நெல்லிக்காய் அளவு
சுடுநீர்
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 15 பல்
கறிவேப்பிலை - 1கொத்து
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து வரமிளகாய் மற்றும் புளியை போட்டு சுடுநீரில் 10 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்கள் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பதத்தில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காய பூண்டு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதற்கு இடையில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் புளி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்ன் அதனுடன் தேவையானளவு உப்பு சேர்த்து அரைத்து, வதக்கிய விழுதுடன் சேர்த்து நன்றாக கிளறி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு, இறுதியாக சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், அட்டகாசமான சுவையில் புளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |