இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே.. சர்க்கரை நோயுள்ளவர்கள் பாப்கார்ன் சாப்பிடலாமா?
பொதுவாக குடும்பமாக வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது குழந்தைகள் வாங்கி சாப்பிடும் சில நொறுக்குத்தீனிகளை நமக்கும் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் சிலருக்கு இருக்கு உடல்கோளாறு வெளியில் கிடைக்கும் உணவுகளை ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு இதனால் வேறு வழியில் பிரச்சினைகள் வரக்கூடும்.
இதற்கு பயந்து நோயுள்ளவர்கள் வெளியிடங்களுக்கு சென்றால் எவ்வளவு பசியாக இருந்தாலும் எந்தவிதமான உணவையும் எடுத்து கொள்ளமாட்டார்கள்.
இந்த வரிசையில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் வெளியில் செல்லும் பொழுது பாப்கார்ன் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடலாமா?
சோளத்தை அடிப்படையாக வைத்து பாப்கார்ன் தயாரிக்கப்படுகிறது. சோளத்தை அதிகமாக வெப்பமேற்றும் பொழுது அதிலுள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது.
இப்படி தயாரிக்கப்படும் பாப்கார்னில் குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மருத்துவர்கள் இது ஒரு சிறந்த நொறுக்குத்தீனி என்கிறார்கள்.
ஒரு கப் பாப்கார்னில்,
- 31 கலோரிகள்
- 1 கிராம் நார்ச்சத்து
- 1 கிராம் புரதம்
- 6 கிராம் கார்போஹைட்ரேட்
- 55 என்ற மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ்
- வைட்டமின்கள் ஏ, பி1, பி3, 6, ஈ
- இரும்புச்சத்து, மாங்கனீஸ்
- மெக்னீசியம், கால்சியம்
- பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம்
பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின் என்பவை கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. இதனால் குழந்தைகள் சாப்பிடலாம்.
பாலிபெனால்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் பாப்கார்னில் அதிகம் இருக்கின்றது இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் வெண்ணெய், உப்பு சேர்க்காத பாப்கார்னை வாங்கி உண்ணலாம். நார்ச்சத்துக்கள் இருப்பதாலும் இது உடலுக்கு நன்மை தரும்.
முக்கிய குறிப்பு
பாப்காரினில் மசாலா, எண்ணெய் சேர்க்காமல் இருந்தால் நல்லது. இப்படி சேர்த்த பாப்கார்னில் கிளைசிமிக் இன்டெக்ஸ் இருக்கும். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |