நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் ஏன் சிறந்த உணவு? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
நீரிழிவு நோயாளிகள் காளான் சாப்பிடுவது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பின்பு உணவுகளிலும் கட்டுப்பாடு அவசியமாகின்றது.
ஆனால் காளான் சாப்பிடும் போது சற்று சந்தேகம் ஏற்பட்டுவிடுகின்றது. காளான்கள் பூஞ்சை வகையைச் சேர்ந்ததால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் ஏன் சிறந்த உணவாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் ஏன் சிறந்த உணவு?
காளான் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் கிளைசெமிக் சுமை கொண்டுள்ளதால் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுப்பதுடன், குளுக்கோஸ் அளவையும் கட்டுப்படுத்துகின்றது.
காளானில் மிகக் குறைந்த சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தும்.
காளானில் பாலிசாக்கரைடுகள் உள்ள நிலையில், நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளதுடன், குறித்த நோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகின்றது.
நீரிழிவு நோயின் முதல்படி உடல் பருமன் ஆகும். அதிக எடையுடன் இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றது. காளானை தொடர்ந்து சாப்பிடுவதால் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
காளானை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும்?
காளானில் புரதங்கள், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, டெர்பென்ஸ், குயினோலோன்கள், ஸ்டீராய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா-குளுக்கன் போன்ற பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன.
மேலும் இந்த உணவுப் பொருளை சரியாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே பலனை நீங்கள் பெறலாம். அந்த வகையில் நீங்கள் காளானை சாலட் வடிவில் வேகவைத்து சாப்பிடலாம் அல்லது குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |