ஆட்டு ஈரலை இப்படி செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க
ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இறைச்சி வகைகளில் இது மிகவும் சத்தான பொருளாக பார்க்கப்படுகின்றது.
ஆனால் வீடுகளில் உள்ளவர்களில் சிலர் ஈரல் சாப்பிட விரும்பமாட்டார்கள். ஏனெனின் ஈரல் சாப்பிடும் பொழுது ஒரு வகையான மணம் வரும்.
மாறாக சிலர் சமைக்கும் பொழுது அந்த மணம் வராதுப்படி சமைப்பார்கள். அதற்காக என்னென்ன பொருட்கள் வறுவலில் சேர்க்கிறார்கள் என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அப்படியாயின் வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி ஆட்டு ஈரல் வறுவல் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து ஒரு பக்கமாக வைத்து கொள்ளவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கிளறவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து கழுவி வைத்திருக்கும் ஆட்டு ஈரலை சேர்த்து, சிறிது உப்பு தூவி, ஈரல் நீர் விட்டு வற்றும் வரை வேக வைத்து இறக்கவும்.
அதன் பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து அதில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு பொடி, வெங்காயம், உப்பு, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்க விடவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர் அதில் பாதியாக வேக வைத்துள்ள ஆட்டு ஈரலை கொட்டி நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மசாலா பொடி, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறவும். 3-4 நிமிடங்களுக்கு பின்னர் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆட்டு ஈரல் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |