மீதமான சாதத்தில் காலை டிபன் எப்படி செய்வது?
சாதம் மீதமாகிவிட்டால் அதனை உடனே குப்பையில் தூக்கி கொட்டும் நபர்களுக்கு அருமையான பதிவு தான் இதுவாகும்.
ஆனால் மீந்து போன சாதத்தினை காலை உணவாக எப்படி மாற்றுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றாகும். ஆம் மீந்து போன சாதத்தில் காலை உணவாக அடையும், அதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை வேறலெவலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 3/4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி - 10-15
துருவிய தேங்காய் - 1 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் சாதத்தைப் போட்டு, மிகவும் மென்மையாக அரைக்காமல் ஓரளவு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, துருவிய தேங்காய், கடலை மாவு ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன் பின் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கையால் பிசைந்து விட வேண்டும்.
பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற வேண்டும்.
அதன் பின் பிசைந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி, ஒரு வாழை இலை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, உருட்டிய உருண்டையை வைத்து கையால் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான அடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |