கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது.
மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் தண்ணீரை வெயில் காலத்தில் எவ்வாறு பருக வேண்டும் என்பது தொடர்பில் நம்மில் பலரும் கவனம் செலுத்துவது இல்லை.
வெயில் காலத்தில் குளிர்ந்த நீரை பருகலாமா? அப்படி குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெயில் காலத்தில் குளிர்ந்த நீரை பருகலாமா?
சிலர் கோடைக் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வது உடலில் பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது. நாம் குளிர்ந்த நீரை பருகும் போது உடல் அந்த வெப்பநிலையை சமன் செய்ய அதிக ஆற்றலை விரயம் செய்ய வேண்டியிருக்கும். அதனால் செரிமான செயல்முறை மந்தமாக்கப்படுகின்றது.
மேலும் நுரையீரல் நிபுணர்களின் கருத்துப்படி ஐஸ் வாட்டர் பருகுவதால் குறிப்பாக சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாகின்றன.
அது மாத்திரமன்றி ஆய்வுகளின் அடிப்படையில் கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் பருகுவதால் பல்வேறு உடல் உவாதைகளை சந்திக்க வேண்டி ஏற்படுவதுடன் வெப்பமாக இருக்கும் உடலை குளிர்ந்த நீர் மேலும் வெப்பமாக்கிவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆயுர்வேதத்தில், குளிர்ந்த நீர் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குளிர்சாதனப்பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
வெயிலில் இருந்து வந்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
ஐஸ் வாட்டரை உட்கொள்வது உங்கள் உடலின் இதயத் துடிப்பைக் குறைக்கும். ஆய்வுகளின் படி, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து அதிக ஜில்லென்று இருக்கும் நீரை குடிப்பதன் மூலம் வாகஸ் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகின்றது.
தண்ணீரை அதிக வெப்பமாகவே அல்லது குளிராகவே பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமான விளைவுகளையே கொடுக்கின்றது. வெதுவெதுப்பான நீரை பருகுவதே அதிலும் குறிப்பாக கொதித்தாறிய நீரை பருகுவதே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |