வீட்டில் முட்டை இருக்கா? அப்போ சுவையான இந்த ரெசிபி செய்ங்க
பொதுவாக எல்லோரத வீட்டிலும் காலை உணவாக அல்லது இரவு உணவாக சப்பாத்தி செய்வது வழக்கம். இதற்கு சுவையாக ஏதும் தொட்டுக்கொள்ள செய்யவில்லை என்றால் காலை உணவு அப்படியே மிஞ்சி விடும்.
எனவே வீட்டில் இரண்டு முட்டை மட்டும் இருந்தால் போதும் சுவையான முட்டை கீமா மசாலா சுலபமாக செய்யலாம்.
இந்த ரெசிபி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான ரெசிபியாகும். எனவே இந்த பதிவில் முட்டை கீமா மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேக வைத்த முட்டை - 2
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச்
- பூண்டு - 3-4 பல்
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வெங்காயம் - 2
- உப்பு - சுவைக்கேற்ப
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
- தக்காளி - 2 (அரைத்தது)
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை
முதலில் வேக வைத்த முட்டைகளை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள் இதை கிளரும் போது தீயை குறைவாக வைக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின் தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக துருவிய முட்டையை சேர்த்து நன்கு கிளறி, 1 கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை கீமா மசாலா தயார் .
இதை சூடான சப்பாத்தி ரொட்டியில் வைத்த சாப்பிட்டால் சுவை பிரதாதமாக இருக்கும். சப்பாத்தி பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |