HMPV வைரஸ் தொற்றை ஓட விடும் கசாயம்.. குழந்தைகளுக்கு அவசியம்- தினமும் குடிக்கலாமா?
சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் HMPV வைரஸானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த தொற்று இந்தியா- பெங்களூருவில் உள்ள இரண்டு கைக்குழந்தைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த தொற்றின் தாக்கம் இருப்பதாகவும் ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது.
HMPV வைரஸானது கோவிட்-19 வைரஸ் தொற்றை போன்று ஆபத்தானது இல்லை என மருத்துவர்கள் கூறினாலும் இந்த தொற்று உடலில் உள்ள சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக சுவாச பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
இந்த தொற்று நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தொற்றக்கூடும் எனவும் வழியுறுத்தப்பட்டுள்ளது. HMPV வைரஸ் தொற்றாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில், HMPV வைரஸ தொற்றை கட்டுக்குள் வைக்கும் கசாயம் எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கசாயம்
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 2 இன்ச்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* ஏலக்காய் -5
* மிளகு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கசாயம் வைப்பது எப்படி?
முதலில் அம்மியில் இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை வைத்து லேசாக தட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் தட்டி வைத்திருக்கும் மசாலாக்களை சேர்க்கவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, சுமாராக 5 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
கொதி விட்டவுடன் வடிகட்டி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து இறக்கினால் இஞ்சி மஞ்சள் கசாயம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |