ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே மருத்தவ குணங்கள் அதிகம் கொண்ட உணவுகளின் பட்டியலில் இஞ்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது.
இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இஞ்சி ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
மேலும் ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கொடுக்கும்.
இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் (Gingerol) எனும் எண்ணெய்யானது ,வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்ற துணைப்புகின்றது.
இப்படி ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சியை கொண்டு ஆந்திரா பாணியில் அசத்தல் சுவையில் அவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
நறுக்கிய இஞ்சி - அரை கப்
தேங்காய் எண்ணெய் - 2 தே.கரண்டி
நறுக்கிய பூண்டு - 2 தே.கரண்டி
காஷ்மீர் மிளகாய் - 5
சீரகம் - 1 தே.கரண்டி
மல்லி விதை - 2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க தேவையானவை
கடுகு - அரை தே.கரண்டி
கடலைப் பருப்பு - அரை தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தே.கரண்டி
காஷ்மீர் மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கி தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிவப்பு மிளகாய், சீரகம், மல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து, நன்றான கலந்து,மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட்டு வதக்கி அதையும் தனியான எடுத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சியில் ஆற வைத்த பொருட்களுடன் வெல்லம், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்ககொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து அதனை சட்னியில் ஊற்றினால் அவ்வளவு தான், நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |