Veg Keema: அசைவத்திற்கே சவால் கொடுக்கும் வெஜ் கீமா
கீமா பொதுவாக மட்டனில் தான் செய்வார்கள். ஆனால் அதே சுவையை வெஜ்யிலும் செய்து எடுக்கலாம். இந்த முறையை பஞ்சாபியர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
பஞ்சாபி ஹோட்டல்களில் இதை சாப்பிட்டிருக்கலாம். வெஜ் கீமா செய்வதற்கு அதன் மசாலாவை மிகவும் நல்ல பக்குவத்தில் அரைத்து எடுக்க வேண்டும். வெஜ்கீமா சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஏனெனில், இதில் நிறைய காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. இதை சூடான சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம். இந்த பதிவில் ஆரோக்கியமான வெஜ் கீமா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வெஜ் கீமா மசாலா செய்யத் தேவையானவை
- புழுங்கல் அரிசி - ஒரு கப்
- வெள்ளைப்பூண்டு - சில பற்கள்
- பச்சை மிளகாய் - சிறிதளவு
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- கசூரி வெந்தயம் – 1
- உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- நெய் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சீரகப்பொடி, கரம் மசாலா, மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்
- துருவிய கேரட்
- பிரெஞ்சு பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- கொத்தமல்லி - சிறிதளவு
- பெரிய வெங்காயம் - இரண்டு
செய்யும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். இது நன்றாக சூடானதும் நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். சீரகம் வறுத்த வாசனை வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். இப்போது அதில் மிளகாய்த் தூள் சேர்க்கவும். பின்னர் சீரகப்பொடி, கரம் மசாலா, மல்லி தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை இவை அனைத்தையும் வறுக்கவும். இப்போது காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின், இந்த கலவையில் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு வெந்து மென்மையாகும் வரை சமைக்கவும்.
இதன் பின்னர் துருவிய கேரட், வேகவைத்த பிரஞ்சு பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்க்கவும். அடுத்ததாக, பச்சை பட்டாணி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் சமைக்கவும். பின்னர் அதில் கசூரி வெந்தயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கி எடுத்தால் வெஜ் கீமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |