வெறும் 2 பொருள் இருந்தா போதும்.. 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த பெட்டி கடை coconut-mittai
குழந்தைகள் பெரும்பாலும் கடைகளுக்கு சென்றால் இனிப்புகள் வாங்கி கேட்டு அடம்பிடிப்பார்கள்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் கடைகளில் வாங்கிக் கொடுப்பதை விட வீடுகளில் சுத்தமாக செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
அந்த வகையில், 90ஸ் கிட்ஸ் காலத்தில் பெட்டிக் கடைகளில் அதிகமாக விற்கப்படும் ஸ்வீட் தான் தேங்காய் மிட்டாய் அல்லது தேங்காய் பர்பி.
தேங்காய் பர்பி செய்வதற்கு வீட்டில் வெறும் 2 பொருட்கள் இருந்தாலே போதும்.
இதன்படி, தேங்காய் பர்பி எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்ப்போம்.
தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள்
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப
* தண்ணீர் - 1/4 கப்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* நெய்
செய்முறை
- முதலில் தேங்காயை மாத்திரம் தனியாக எடுத்து மிக்ஸி சாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த தேங்காயை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அதே கப்பில் வெல்லத்தை பொடித்து போடவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். பாகுவில் கட்டியாவதற்கு முன்னர் அடுப்பை அணைக்க வேண்டும். வேறொரு கடாய் எடுத்து மிதமான வெப்பநிலையில் சூடாக்கி, தேங்காய் பூவை கடாயில் கொட்டி வறுக்கவும்.
- வறுத்த தேங்காய் உடன் வெல்ல நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் அந்த கலவையுடன் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மா கலந்து கையில் ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.
- இது ஒருபுறம் இருக்கையில், ஒரு தட்டில் நெய்யை தடவி, தேங்காய் பூ கலவையை கொட்டி ஆற வைக்கவும். கலவை வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே ஒரு பாட்டில் மூடியை வைத்து அழுத்தி தட்டில் வைக்கவும்.
- இந்த ரெசிபியை சரியாக செய்தால் சுவையான தேங்காய் பர்பி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |