10 நிமிடங்கள் Spot jogging செய்தால் இவ்வளவு பலன்கள்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Spot jogging என்பது நின்ற இடத்தில் நின்றுக் கொண்டே ஓடும் பயிற்சியாகும்.
இது ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் முறையாகும்.
இதனை பெரும்பாலும் வார்ம்-அப் நடைமுறைகள் அல்லது சுறுசுறுப்பு பயிற்சிகளின் போது செய்வார்கள்.
Spot jogging ஒரு முதன்மை வொர்க் அவுட்டாக பார்க்கப்படுகின்றது.
இந்த பயிற்சியை வெறும் 10 நிமிடத்திற்கு நின்ற இடத்தில் செய்தால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் Spot jogging செய்வதால் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Spot jogging
1. 10 நிமிடங்களுக்கு Spot jogging செய்தால் இதய துடிப்பு அதிகமாகும். அத்துடன் இதய ஆரோக்கியம் வலுவானதாக மாறும். இது போன்ற எரோபிக் செயல்பாடுகள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
2. Spot jogging செய்வதால் சகிப்புத்தன்மை மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சியால் ஆக்ஸிஜனை திறன்பட வேலைச் செய்ய ஆரம்பிக்கும். இது சகிப்புத்தன்மைக்கு வழிவகுக்கும்.
3. Spot jogging செய்து வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும். இந்த பயிற்சியால் இயற்கையாகவே மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும. அதிகமான மனசோர்வு இருந்தால் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |