நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? ஆரோக்கியத்திற்கு சத்குரு சொல்லும் ஆலோசனை
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இப்படி யோசிப்பவர்களுக்கள் ஆன்மீகத் தலைவரான சத்குருவின் ஆலோசனைகளை பின்பற்றலாம்.
இவர் கூறும் ஆலோசனைகள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் நீண்ட ஆயுளையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சத்குருவின் ஆலோசனைகள்
1. சத்குரு ஆலோசனைப்படி இயற்கையான அல்லது பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் ஸீட்கள் ஆகியவற்றை கூறலாம். இந்த உணவுகள் சிறந்த உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்களையும் தருகிறது. இப்படியான உணவு பழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
2. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் முதலில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். தினசரி யோகா மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகளில் அவசியம் ஈடுபட வேண்டும். இந்த பயிற்சிகள் , உடல், மனம் மற்றும் ஆத்மாவுக்கு இடையே சமநிலைக்கும் உதவியாக இருக்கின்றது. உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடல்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சத்குரு கூறுகிறார்.
3. நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு ஒற்றுமை இருப்பதாக சத்குரு கூறுகிறார். உடலை சீராக வைத்திருக்க வேண்டுமானால், சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். நாம் தரமான தூக்கத்தை தூங்குவதன் மூலம் உடல், மனம் என இரண்டுயும் புதுப்பிக்க முடியும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வருவதும் குறைவடையும்.
4. நமக்கு வரும் பிரச்சினைகளை ஓட ஓட விரட்டுவதற்கு மனதில் ஒருவகையான அமைதி, தைரியம் தேவை. இதனை நாம் தியானத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் கவனம், தெளிவு மற்றும் உணர்ச்சிகளை மேம்படுத்தவும் தியானம் உதவுவதாக சத்குரு கூறுகிறார்.
5. சத்குருவின் கூற்றுப்படி, நல்ல ஆரோக்கியத்திற்கு வாழ்க்கை வேண்டுமென்றால் கவலையை தள்ளி வைத்து மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நன்றியுணர்வு மற்றும் மனநிறைவு இருந்தாலே மகிழ்ச்சி இயற்கையாகவே வரும். மகிழ்ச்சியாக இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த அழுத்தம் குறையும். அத்துடன் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் வராமல் கட்டுபடுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |