உங்கள் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவர்?
தற்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்டன. வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் என்பன அரிதிலும் அரிதாகிவிட்டது.
காதல் திருமணங்களிலாவது ஓரளவு இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கும். ஆனால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அந்த எதிர்பார்ப்பு சற்று குறைவுதான்.
அந்த வகையில் தனது வாழ்க்கைத் துணை தனக்கு ஏற்றவர்தானா? என்பதை இவற்றை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
image - today
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்
இரு தரப்பினரும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது உங்கள் வருங்கால துணையின் வளர்ப்பு, மதிப்பு என்பவற்றை வெளிக்காட்டும்.
சவால்களை எதிர்கொள்ளுங்கள்
உங்களுக்கு ஏற்படும் சவால்கள், தடைகளை ஒன்றாக சமாளிக்கும்போது அது உங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும்.
image - wakkpapers.com
உணர்ச்சிகளை மதிப்பிடுங்கள்
உங்கள் துணையுடன் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தால் இது இருவருக்குமான வலுவான ஒரு தொடர்பாக காணப்படும். அதாவது உணர்ச்சி ரீதியாக ஆதரவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
உரையாடல்கள்
உரையாடல்கள் என்றுமே ஒருவர் மீது ஒருவருக்கான விருப்பங்களையும் கருத்துக்களையும் வெளிக்கொண்ரும்.
அந்த வகையில் உரையாடல்களை மேற்கொள்ளும்போது, வாழ்க்கை, நிதி, எதிர்காலம் குறித்து பல விடயங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.