அதிக நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் கேரட்டை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க வேண்டுமா? இந்த டிப்ஸ் போதும்
பொதுவாகவே நம்மில் சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக பல நன்மைகளைக் கொண்ட கேரட்டை உபயோகிப்பது வழக்கம். அவ்வாறு அதிகம் பயன்படுத்துபவர்கள் தினமும் கேரட்டை கொஞ்சம் அதிகம் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு வாங்கி வைக்கும் போது அவை நீண்ட நாட்களுக்கு புதிது போல இருக்காது. இரண்டு மூன்று நாட்களில் கருப்பாகி பழுதாகி விடும். அதிலும் வெயில் காலங்களில் வாங்கினால் சீக்கிரம் அழுகி போய்விடும். அந்தவகையில், நீங்கள் அதிகம் கேரட் வாங்கினாலும் ப்ரெஷ்ஷாக பழுதாகாமல் இருக்க சில டிப்ஸ்களை செய்து பாருங்கள்.
கேரட்டை ப்ரெஷ்ஷாக இருக்க,
தோலுரிக்கப்படாத கேரட்டை முழுவதுமாக கழுவினால் அவை சீக்கிரமே கெட்டுவிடும் அதனால் அவற்றை பயன்படுத்தத் திட்டமிடும் வரை கேரட்டைக் கழுவ வேண்டாம்.
கேரட் கீரைகளை முறுக்கி அல்லது ட்ரிம் செய்து, அவற்றைப் பயன்படுத்த திட்டமிட்டால், அவற்றை தவிர்ப்பது நல்லது. அதனால் ஒரு தனி கொள்கலனில் சேமிக்கவும்.
கேரட்டை ஒரு பேப்பர் டவலில் போர்த்தி, காற்று புகாத கொள்கலனில் வைக்கவும். கேரட்டை குளிர்சாதனப்பெட்டியின் குளிர்ந்த பகுதியிலும், ஆப்பிள் போன்ற எத்திலீன் வாயுவை உற்பத்தி செய்யும் பழங்களிலிருந்தும் தனியாக வைத்து கெட்டுப்போவதைத் தடுக்கவும்.
கேரட் வாங்கும் போது கேரட்டின் நிறம் மற்றும் அதன் மேல் எந்த புள்ளிகளும் இல்லாமல் இருக்கும் கேரட்டை பார்த்து வாங்க வேண்டும்.
தோல் நீக்கிய கேரட்டை ஒரு கொள்கலனில் போட்டு தண்ணீர் சேர்த்து மூடி விடவும். அந்த தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி விடவேண்டும்.
தோல் நீக்கி, நறுக்கிய கேரட் துண்டுகளை வேக வைத்து ஃப்ரீசரில் வைக்கலாம்
கேரட்டை குளிர்ந்த நீரில் தான் கழுவ வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |