கால்சியம் குறைவால் எலும்பு தேய்மானம் பிரச்சனையா? நிரந்தரமாக விரட்டியடிக்க சில டிப்ஸ்
பொதுவாக 40 வயதை கடக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் எலும்பு தேய்மான பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினைகள் நாம் ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற செயற்பாடுகளின் விளைவாக ஏற்படுகிறது.
இது மட்டுமல்லாது மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் மற்றும் முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ் போன்றவை காரணமாகவும் எலும்பு தேய்மான பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த நோய் நிலைமைகளால் பாதிக்கப்படும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துக் கொண்டவுடன் வைத்தியரை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் தமது வேலைகளை கூட செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்து விடுகிறது.
மேலும் எலும்பு தேய்மானம் பிரச்சினையுள்ளவர்கள் கால்சியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
உதாரணமாக உளுத்தம் பருப்பு, கொள்ளு, ராகி, முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் எலும்பு தேய்மானம் பிரச்சினையை எவ்வாறு தடுக்கலாம், அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.