கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும்.
முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்து கூந்தல் வளர்ச்சியை இயற்கையாகவே அதிகரிக்க நாம் பின்பற்ற வேண்டிய கூந்தல் பராமரிப்பு முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க...
கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் தலைக்கு ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் கண்டிஷனரை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
உச்சந்தலை உலர்ந்த தன்மையில் இருப்பவர்கள் வாரத்தில் ஓர்இரு முறைகள் குளிப்பது போதுமானது. என்றாலும், உச்சந்தலை எண்ணெய் பசையுள்ளதாக இருப்பவர்கள் தினமும் குளிப்பது அவசியம்.
அடிக்கடி முட்டை மாஸ்க்கை பயன்படுத்துவது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் துணைப்புரிகின்றது.
இறுக்கமான முடி ஸ்டைலைத் தெரிவு செய்வதால் கூந்தல் அதிகமாக பாதிப்படைவதுடன் முடி உதிர்வு அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றது. எனவே கூந்தலுக்கு எப்போதும் லேசான ஸ்டைலை தெரிவு செய்வது கூந்தல் வளர்ச்சியை இயற்கையாயவே ஊக்குவிக்கின்றது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சிறைந்த உணவுகளையும் புரதம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தலுக்கு இயற்கையாகவே ஊட்டமளிதத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது.
வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்த துணைப்புரிகின்றது.
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |