ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா? இதை கவனித்தால் 5 நிமிடத்தில் கண்டுப்பிடிச்சிடலாம்
பொதுவாகவே நாம் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு நிச்சயம் மற்ற மனிதர்களின் துணையை நாட வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றோம்.
நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் ஒவ்வொரு வேலையிலும் நேரடியாகவே மறைமுகமாகவோ மற்ற நபர்களின் உதவியை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
எனக்கு யாரும் இல்லை நான் தனியாக தான் வாழ்கின்றேன் என சொல்லுபவர்கள் கூட நிச்சயம் மற்றவர்களின் உதவியின்றி ஒரு நாளை கூட கடக்க முடியாது என்பதே நிதர்சனம்.
அப்படி நாம் தினசரி தொடர்புகொள்ளும் பல மனிதர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என அறிந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயம். அது தேவையற்றதும் கூட.
ஆனால் நாம் நெருங்கி பழகும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மனிதர்களின் உண்மை குணத்தை கண்டுப்பிடிக்க வெறும் 5 நிமிடங்களே போதும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் ஒரு சில நடத்தைகளை சற்று உற்று கவனித்தாலே போதும் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மற்றவர்களை நடத்தும் விதம்
நபரொருவர் தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடமும் அவர்களின் மேலதிகாரிகளிடமும் எப்படி நடந்துக்கொள்கின்றார் என்பதை கவனிக்க வேண்டும்.
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை உண்மையாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர் ஒரு ஹோட்டல் வெயிட்டரையோ, வாட்ச் மேனையோ, சுத்தம் செய்பவரையோ முதலில் மனிதராக மதிக்கின்றாரா என்பது அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிவிடும்.
நல்ல மனம் செய்யும் தொழிலை பார்த்து மரியாதை வழங்காது. மேலதிகாரியோ அல்லது சுத்தம் செய்யும் தொழில் புரிபவரோ அடிப்படையில் மனிதர்கள் என்பதை புரிந்துக்கொண்டு நடத்துபவர்கள் நிச்சம் நல்லவர்கள் தான்.
கேட்கும் திறன்
மற்றவர்கள் பேசும் போது முழுமையாக காது கொடுத்து கேட்கும் குணம் ஒருவரிடம் இருக்கின்றதா என்பதை கவனித்துப்பாருங்கள்.
நல்ல மனிதர்கள் தங்களின் உணர்வுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிச்சயம் மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
புரிந்துணர்வு
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை முக்கியமாக அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் காண்பித்துவிடும்.
மற்றவர்கள் தங்களின் பிரச்சினையை கூறும் போது அதை புரிந்துக்கொள்ளும் குணம் இருப்பவர்கள் நிச்சயம் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
அவர்கள் மற்றவர்களுக்கு விதிக்கும் கட்மளைகளை அவர்களும் பின்பற்றுகின்றார்களா என அவதானித்துப்பார்க்க வேண்டும். இது ஒருவரின் புரிந்துணர்வை வெளிப்பமையாக காட்டிவிடும்.
பேச்சு மற்றும் நடவடிக்கை
மனிதர்கள் பேசும் விதம் நடந்துக்கொள்ளும் விதம் ஆகியவற்றை வைத்தே அவர் நல்லவரா கெட்டவரா என்பதை கணித்துவிட முடியும்.
சிந்தனை தான் பேச்சில் வெளிப்படும். சிந்திப்பதை வெளிப்படுத்தாமல் மனிதர்களால் இயங்கவே முடியாது.
பேச்சில் எப்போதும் நல்ல வார்க்தைகள் இருக்கின்றது என்றால் நிச்சயம் அவர்களின் சிந்தனையும் மனமும் அழகாக இருக்கின்றது என்று தான் அர்த்தம். அதை கவனித்தாலே ஒருவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை எளிதில் அறிந்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |