self control: சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளணுமா? இதையெல்லாம் பண்ணுங்க
பொதுவாகவே ஒரு மனிதன் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் சுய கட்டுப்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
தான்தோன்றித்தனமாக செயற்படும் யாரும் வாழ்வில் எந்த நல்ல விடயத்தையும் செய்ய முடியாது. அது மட்டுமன்றி மனம் போன போக்கில் ஒருவர் வாழும் பட்சத்தில் கண்டிப்பாக பல்வேறு வித இன்னல்களை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
பொரும்பாலான மனிதர்கள் தாங்களின் பயனற்ற விடயங்களுக்கு அடிமையாக இருப்பதன் காரணமாக முக்கியமான தருணங்களில் தங்களின் மொத்த கவனத்தையும் சிதறடிக்கும் நிலை ஏற்படுகின்றது.
சுய கட்டுப்பாடு இல்லாத போதே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பமக்கூடும். சுய கட்டுப்பாட்டை ஒருவர் வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் நமது கவனத்தை சிதறக்கும் பல்வேறு மாயைகளில் இருந்து விடுப்பட முடியும்.
சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதன் மூலமாக ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் வாழ்வில் யாராலும் செய்ய முடியாத விடயங்களை கூட எளிமையாக சாதித்துக்காட்டலாம்.
சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய எளிமையான முறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுயக்கட்டுப்பாட்டடை அதிகரிக்கும் எளிய வழிகள்
சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் உங்களை கட்டுப்பாட்டை இழக்க செய்யும் விடயங்கள் என்னென்ன என்பது குறித்து சுய பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.
மனிதர்கள் தங்களுக்கு கவலை அல்லது மனஅழுத்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற விடயங்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள்.
அவ்வாறான விடயங்கள் தங்களுக்கு பாதகமான விளைவை கொடுத்தாலும் கூட அது குறித்து அக்களை காட்டாமல் குறித்த பழக்கத்தை தொடர்கின்ற நிலை காணப்படுகின்றது.
அதனால் நீங்கள் பிரயோசனம் அற்ற செயல்களில் ஈடுப்படுகின்றீர்களா? என்பதை அவ்வப்போது மீளாய்வு செய்வது சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள துணைப்புரிகின்றது.
சுயகட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கு முதலில் இலக்குகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இலக்கின் மீது கவனம் செலுத்த உங்களுக்கு தடையாக இருக்கும் விடயங்களை பட்டியலிட்டு அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்படும் போது குறிப்பிட்ட காலத்தில் உங்களின் சுய கட்டுப்பாடு தனாக அதிகரிக்கும்.
ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இதனை முறையாக பின்பற்றும் பட்சத்தில் வெற்றியடைய முடியும்.
உதாரணத்துக்கு நாள் முழுவதும் நான் 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவேன், இந்த வாரத்தில் நான்கு நாட்கள் வீதம், ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வேன் என உங்களுக்கு நீங்களே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு முயற்ச்சி செய்யும் போது அது போன்ற எல்லா விடயங்களிலும் உங்கள் சுய கட்டுப்பாட்டை எளிமையாக வளர்த்துக்கொள்ள முடியம். இந்த கட்டுப்பாடு உங்களின் வாழ்வை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல இன்றியடையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |